காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை தரிசனம் செய்தனர்.
63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா, கடந்த மாதம் 30-ம் தேதி துவங்கியது. பரமசிவன், அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மாங்கனிகளை வாரி இறைத்து சிவனை வழிபட்டனர். இறைக்கப்படும் மாங்கனிகளை பிடித்து உண்டால், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. மாங்கனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.