ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன.
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பச்சைக்கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக்கிளி, நீலப் பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங் காடை, கவுதாரி மற்றும் வன உயிரினங்களை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் தங்கள் வசம் உள்ள வன உயிரினங்களை அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பச்சைக்கிளிகளை வனத்துறையினர் நன்கு பராமரித்து உரிய உடல்நலத்துடன் உள்ளதை உறுதி செய்தபிறகு வனப்பகுதியில் பறக்க விட்டனர்.