முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும்போது பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு கட்டட இறுதி கட்டட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக கட்டிடத்திற்கு 60 கோடி மதிப்பீட்டில் புத்தகம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நூலகத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும் 15ம் தேதி திறந்து வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே மதுரை சட்டமன்ற தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலைகளை தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிசெல்வி, உதவி ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.