திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்து கண்மாய் மழை பெய்து நிரம்பினால், ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு, கண்மாய் நிரம்பியதை அடுத்து, நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், செண்பகம் பேட்டை, இரணியூர் நாகப்பன்பட்டி, கீழசெவல்பட்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பங்கேற்றனர்.
இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு கொண்டு கச்சா, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையா கன்மாயிலில் கிடைக்கும் மீன்களை பிடித்தனர். இதில், விரா,கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது.