2023 மற்றம் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், டெலிவரி ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்ட முதலமைச்சர் சித்தராமையா, அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக, ஸ்விக்கி, ஜொமாடோ, அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் முழு நேரவ மற்றும் பகுதி நேர டெலிவரி பணியாளர்களாகளுக்கு 4 லட்சம் வரை காப்பீடு வழங்கும், ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடுக்கான ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் அடங்கும் என தெரிவித்தார்.
தொழிற்சங்கத்தின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பட்ஜெட் அவர்களின் வேலையின் முறைசாரா மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யும் ஒரு விதியை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் சித்தராமையா, டெலிவரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு சமூக பாதுகாப்பு வலையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை, மாநில அரசு அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.