கோட்டகுப்பம் அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கீழ் புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை ஓரம் புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் ஆறு பேர், ஆட்டோவுக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில், லக்ஷ்மி, கோவிந்தம்மாள், கங்கையம்மாள், நாயகம் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், தலா 2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்ற திருமதி. நாயகம் அவர்களுக்கு 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.