அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, எதிர்கட்சிகள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அமைச்சர் பொந்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய மல்லிகார்ஜுன கார்கே எதிர்கட்சியினரை மிரட்டி பிளவுப்படுத்த முயற்சிக்கும் மோடி அரசின் தந்திரம் இனியும் பலிக்காது என கூறினார்.