எதிர்கட்சிகளின் ஒற்றுமையால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவால் ஏவப்பட்டுள்ள அமலாக்கத்துறை வட மாநிலத்தை போல தமிழகத்திலும் சோதனை நடத்தி வருகிறது எனவெளம் இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என தெரிவித்தார்.