வேளாங்கண்ணியில் உள்ள உத்திரிய மாதா கோவிலில் நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர்கள் தூவி பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித உத்திரிய மாதா கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேர்பவனியில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப்பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாராம்பரிய முறைப்படி வழிபட்டனர்.
தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது பக்தர்கள் புனித உத்திரியமாதா, செபாஸ்தியர் மற்றும் அந்தோணியர் தேர் மீது மலர்கள் தூவி பிரார்த்தனை செய்தனர். தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.