ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வலியுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விற்பனை செய்ய இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பேசினார்.
மேலும் பனைத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வங்கிகள் மூலம் உரிய கடனுதவி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் எனவும், தரவை மற்றும் வரத்து கால்வாய்களை சீரமைத்து மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.