கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள இனி தடுப்பூசி அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது மூக்கு வழியாகவும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூக்கு வழியாக நவீன கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
பி.பி.வி 154 என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4417 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 496 ஆக உயர்ந்தது. தற்போது 52,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மேலும் 23 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது.