இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு எனவும் கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் 3 வது நாள் யாத்திரையில் கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் ராகுல் காந்தி எம்பி பேட்டி அளித்தூள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலும், நடைபயணத்திலும் எந்த முரண்பாடும் இல்லை எனவும் செய்தியாளர் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமையாக இருக்க யாத்திரை செல்வது முரண்டபாடாக இருப்பதாக கேட்டதற்கு ராகுல்பதில் காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட தலைவர்களுக்கு என்னை விட பாஜக அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன்.
கடந்த காலத்தில் நடந்தவை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது, தற்போது நடப்பது மட்டுமே தீர்மானிக்கும் – ராகுல்