சேலம்: வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 வாரத்துக்கு பிறகு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். தலைமையாசிரியர் சிவகுமாரை 3 மாதத்தில் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்ததால் போராட்டம் வாபஸ். மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா, எஸ்.பி. விஜயகுமார், வருவாய் துறையினர் மாணவர்களை வரவேற்று வகுப்புக்கு அனுப்பி வைத்தனர்.
