வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் மனதை கவர்ந்த ஒட்டு மொத்த தலைவராக திகழும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துகிறோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியது, வரவேற்கதக்கது என்றும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை யாருக்கு கொடுத்தாலும், அவர்கள் ஏற்றுகொள்வார்கள் அல்லது இப்போது இருப்பவரை தொடர சொன்னாலும், அவர் தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவித்தார்.