கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்டாபர் 5ம் தேதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த தோகைமலை ஒன்றிய துணை பெருந்தலைவரும் – கள்ளை ஊராட்சி 3வது வார்டு உறுப்பினருமான திருமதி சி.பாப்பாத்தி சின்னவழியான் தலைமையில், நாகனூர் ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் திருமதி ச.தனலட்சுமி சங்கர், கல்லடை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் திருமதி வீ.வளர்மதி ஆசைக்கண்ணு – குளித்தலை ஒன்றிய கவுன்சிலர்களான 9வது வார்டு கவுன்சிலர் எஸ்.ராஜேஸ்வரி, 10வது வார்டு கவுன்சிலர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் த.மா.கா.கட்சியைச் சேர்ந்த 7வது வார்டு கவுன்சிலர் எம்.சத்யா குட்டிமோகன் மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளான தோகைமலை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் டி.சின்னவழியான், தோகைமலை, கல்லடை என்.ஆசைக்கண்ணு, தோகைமலை, நாகனூர் எம்.சங்கர் மற்றும் த.மா.கா.வைச் சேர்ந்த குளித்தலை குட்டிமோகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் – மாண்புமிகு அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.