நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆப்கன் வீரர்கள் சென்னை வந்தனர்.
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இந்தியாவில் தொடங்கி கோலகாலமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் பகல் இரவு ஆட்டங்களாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அக்டோபர் 18ம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து – ஆஃப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளது. இதற்காக தனி விமான மூலம் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் அவர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அவர்கள் பேருந்து மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.