அடுக்குமொழியில் பேசும் வித்தகர், அரசியலில் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியைப் பிடிப்தற்கும் தனது விடாபிடியான கொள்கைகளாலும், அடுக்கு மொழி பேச்சாலும் சாதிக்க முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தலைவர் அறிஞர் அண்ணா. அவரது 114வது பிறந்தநாள் கொண்டாட்டம் செப்டம்பம் 15ம் தேதி 2022 கொண்டாடப்படுகிறது.
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளில் சில பின்வருமாறு:
ஒன்றே குலம், ஒருவனே தேவன்…..!
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்..!
விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு…!
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்…!
கத்தியை தீட்டாதே! புத்தியைத் தீட்டு!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்..!
சட்டம் ஒரு இருட்டறை! அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு! அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை….!
பொது வாழ்வு புனிதமனாது உண்மையோடு விளங்கும் உயர் பண்புதான் அதற்கு அடித்தனமானது…!