அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் கட்டி இன்றுடன் 11ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருமஞ்சன விழா நடைபெற்றது. இதில் சுவாமிக்கு முதல் நாள் கும்பத்தில் நீர் நிரப்பி அவைகளை யாகங்கள் நடத்தினர், இன்று ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் சுவாமிக்கு திரவியபொடி, பால், தயிர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பூ மற்றும் வடை மாலை அணிவித்து ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயருக்கு 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
