திருவள்ளூர் நீதிமன்றம் பண மோசடி வழக்கில், மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளராக பதவி வகிப்பவர் கருணாகரன். இவர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு, 7 லட்சம் ரூபாய் பணத்தை கடனான பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், நாராயணசாமி தான் கொடுத்த பணத்தை கருணாகரனிடம் கேட்டபோது, வங்கி காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். பிறகு அவர் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, கருணாகரன் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இது குறித்து நாராயணசாமி, திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் கடனாக பெற்ற பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டார்.