பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் செப்.8, 2022 வியாக்கிழமை இரவு காலமானார்.
தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து, 1952-இல் அரியணை ஏறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் நிர்வகித்துள்ளார்.
95 வயதிலும் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டு வந்தார்.
எலிசபெத்தின் மறைவு பிரிட்டன் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எலிசபெத்தின் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டரின் அடுத்த அரசரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தன் படி மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் உடனடியாக அடுத்த அரசரானார். அவன் ‘3-ஆவது சார்லஸ்’ என அழைக்கப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் வயதான அரசராக சார்லஸ் உள்ளார்.