கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமைக் காவலர் சபரிகிரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஜோதி நகர் பகுதிகளில் கடந்த 27ம் தேதி நடந்து சென்ற இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். ஒரே நாளில் இரு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்ததுக்கு சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறித்த நபர் இறுதியாக தனியார் மதுபான கூடத்திற்கு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது கோவை போத்தனூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சபரிகிரி என்பது தெரிய வந்தது மற்றும் அவர் பணிபுரிந்து வந்த செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து எட்டு சவரன் நகை மீட்கப்பட்டு கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.