இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தர பிரதேச மாநில முதல்வராகவும், மத்திய நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும், உயர் பதவிகளை வகித்தவர் வி.பி. சிங். என அன்போடு அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங்.
இவர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி, 1989ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஆனார். ஆனாலும் அவர் 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவைகள் என்று மக்கள் போற்றப்பட்டது.
மேலும், அரசு பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கலாம் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலரான வி.பி. சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில் 110-வது கீழ், சென்னையில் விபி சிங் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்