கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நடராஜர் சன்னதி முன்பு குருமூர்த்தி தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க கொடியை, கொடி மரத்தில் ஏற்றி வைத்தார்.
இதன் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தேரோட்டம் மற்றும் தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கொடியேற்று விழாவையொட்டி, சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.