தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக 7 அடியில் தோண்டப்பட்ட குழி மூடாமல் இருந்த பள்ளத்தில், விழுந்து 8 வயது சிறுமி ஹாசினி உயிரிழந்தார்.
இந்த பூங்கா அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், 6 மாதத்திற்கு முன்பே முடிக்கப்பட வேண்டியது எனவும் கூறப்படுகிறது.

சிறுமி உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் குழிக்குள் விழுந்து குழந்தை இறந்துள்ளது.