கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது.
கோயமுத்தூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிகள் கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஜூனியர், சீனியர் என வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கராத்தே அமைப்புகளை சார்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்னிந்திய அளவிலான மண்டல கராத்தே போட்டியிலும் தேசிய அளவிலான கராத்தே போட்டியிலும் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, கே ஜி எண்டர்பிரைசஸ் நிறுவனர் ராம்ராஜ், கராத்தே சங்கத்தின் தலைவர் வி எம் சி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.