அரியலூர் சிமெண்ட் ஆலைகளில் பணியாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், தொழில் கல்வி தொடங்கப்பட உள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
அரியலூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான சிமெண்ட் ஆலைகள் உள்ளதால், இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சிமெண்ட் ஆலை தொடர்பான தொழில் படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என தெரிவித்தார்.