தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்குடி சேலைகள் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் உலக புகழ் பெற்றதாகும். இதில் விலங்குகள் மற்றும் பூக்களின் ஓவியங்கள் அச்சிடப்படுகின்றன. அனைத்து தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற வகையில் பருத்தி ஆடையாக உள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் தேர்வாக சுங்குடி சேலை உள்ளது.
தற்பொழுது தீபாவளி நெருங்குவதால் வடமாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான புடவைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக சின்னாளப்பட்டியில் சுங்குடி சேலை உற்பத்தி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருவதால் காட்டன் சுங்குடி சேலைகளுக்கு சாயம் போட்டு கஞ்சி ஏற்றி உலர வைப்பதற்கு தாமதம் ஆவதால் ஆர்ட் சில்க் ரக புடவைகளில் சுங்குடி சேலைகளை தயாரித்து வருகின்றனர். சுங்குடி சேலைகள் 200 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.