2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதில் பெரியார் விருதை திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருதை கோவை இரா.மோகன், கலைஞர் விருதை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் விருதை புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருதை குன்னூர் சீனிவாசன் ஆகியோர் பெறுகின்றனர்.
இதற்கான பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.