வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அண்ணா அறிவாலயம் வந்த அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கு வந்து அழைத்து சென்றார்.
முதலமைச்சர் சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் நடைபெற உள்ள தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், 2025ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு சீட் வழங்க திமுக முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடம் மக்கள் நீதி மய்யத்திற்கு சீட் வழங்க திமுக முன்வரவில்லை என்று தெரிகிறது.
————————————————————————————-
செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய வாட்ஸ் சானலில் இணையுங்கள்.
https://whatsapp.com/channel/0029VaHVNkh1CYoN460xBg2N
எங்களது வாட்ஸ்செய்தி செய்தி குழுவில் இணைய 7871725717 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் நியூஸ் என மெசேஜ் அனுப்புங்கள். தனிப்பட்ட முறையில் செய்திகள் உங்களை வந்து சேர எங்களுடைய செல்போன் எண் 7871725717 உங்கள் செல்போனில் சேமித்து வைத்து நியூஸ் என வாட்ஸ்அப் மெசேஜ் செய்யவும்.
உங்கள் ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை எங்களது இணையதளத்தில் பதிய செய்திகளை udhayatoday@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.