அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தூத்துக்குடியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே, மதித்தோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலணியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். நரிக்குறவர் மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட இடத்தை, மற்றொரு பிரிவினர் ஆக்கிரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நரிக்குறவர் சமுதாய மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு இடையூறு அளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்குரிய இடத்தை அரசு அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, மனுவும் அளித்தனர்.