ஈரோடு:
அந்தியூர் அருகே 20 அடி பள்ளத்
தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில்,
நான்கு குழந்தைகள் உட்பட 35
பயணிகள் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில்
இருந்து பர்கூர் மலைப்பகுதியில்
உள்ள கொங்காடை பகுதிக்கு,
59 பயணிகளுடன் நேற்று மாலை
அரசுப் பேருந்து சென்றது.
பேருந்தை வெங்கடாசலம் (39) என்பவர் ஓட்டிச்சென்றார். மணியாச்சிப்பள்ளம் அருகே சென்றபோது, எதிரே வந்த
இரு சக்கர வாகனத்துக்கு
வழிவிடும்போது, சாலையில்
இருந்து இறங்கிய பேருந்து,
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது.
இதில், 4 குழந்தைகள்
உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அந்தியூர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டனர். காயமடைந்தவர்களில் 10
பேர் பெருந்துறை அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்கு
மேல் சிகிச்சைக்காக அனுப்பி
வைக்கப்பட்டனர்.
விபத்து
நடந்த பகுதியைப் பார்வை
யிட்ட அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.
வெங்கடாசலம், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பர்கூர் போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.