ஆன் லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் செல்போனில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற தகுதி உள்ளது என கூறி, வங்கி விவரங்களை கேட்டுள்ளனர்.
பின்னர், சுரேஷ் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை பெற்று கொண்ட கும்பல் வங்கி கணக்கில் இருந்து, 24 ஆயிரத்து 955 ரூபாயை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, பலன் இல்லாததால், தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.