மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி,
கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை மையம்
அறிவிப்பு. நாளை திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன்
காணப்படும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் அதிகபட்சமாக பந்தலூர் -16, பிரையர் எஸ்டேட் -11, வால்பாறை, தேவாலா, செருமுள்ளியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
