மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரியான இவர் மது அருந்திவிட்டு பழைய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தை மடக்கி தகராறு செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான வடக்கு காவல்துறையினர் சங்கரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் அடங்காத அவர், மீண்டும் மது குடித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மதுபாட்டிலை உடைத்து திடீரென்று தன் கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டில் விடுத்தார். தனக்கு நீதி வேண்டும் என்று தற்கொலை மிரட்டல் விடுத்த சங்கரை போலீசார் லாவகமாக பிடித்து கைது செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்ட போதை ஆசாமி நீதிமன்ற வளாகம் முன்பு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியது.