தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு கற்றல் அளிக்க வேண்டும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டணம் செலுத்தவில்லை என்றால், அனைத்து பள்ளிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்தார்.