தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, திமுக எம்.பி. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற புத்தக விழாவில் முன்னாள் நீதிபதி கே.சந்துரு ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சந்துரு பேசும்போது, இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருப்பதாகவும், கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம். அவருடைய கைதில் ஏராளமான அத்துமீறல்கள் இருந்தன என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்ட போது எவ்வளவு அத்துமீறல் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் இதை பத்தி அதிகம் பேச விரும்பவில்லை என்றும் பேசினார்.