திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு மற்றும் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நேற்று பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இருக்கக்கூடிய அந்த கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல. பாட்னாவில் நடைப்பெற்ற பாஜக எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரக்கூடிய தேர்தலை மாற்றக்கூடிய கூட்டமாக இருக்கும்.மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய கூட்டம் என்பதை தெளிவாக காட்டுகிறது.
ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறைகளை வைத்து தமிழ்நாட்டையும் திமுகவையும் அச்சுறுத்தி விடலாம் என பாஜக நினைக்கிறது. இதையெல்லாம் பார்த்து பயப்படக்கூடிய இயக்கம் திமுக அல்ல” என்றார்.