திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், அமைதிப்பள்ளத்தாக்கு, தொப்பி தூக்கிப்பாறை, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலாதலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், பேரிஜம் ஏரி பகுதியில் 4 காட்டு யானைகள், குட்டியுடன் முகாமிட்டுள்ளன.
காட்டு யானைகள் நடமாட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை, பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகளின் செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.