வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி தொற்று நோயை பரப்பக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு ஜோதி நகர் 2வது தெரு மேற்கு பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கழிவு நீர் குட்டையாக தேங்கி துர்நாற்றுமும், தொற்று நோய்களும் பரவி வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் வடிகால் வசதி அமைக்கவும், கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினரும் அப்பகுதி மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.