மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவன் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரை சேர்ந்தவர் எம்.பி.எ பட்டதாரி பெண் பசிலத்காத்தூன். இவர் பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது என்பவரை கடந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இளம்பெண் பசிலத்காத்தூன் தனது சகோதரர் முகமது கானுக்கு போன் செய்து கதறி அழுததால் அவரை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்தில் இளம்பெண்ணின் மாமியார் ஷகிலா, மருமகளின் தாயார் ஹசினாவுக்கு போன் செய்து, உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹசினா, உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.