மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணிகளை கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் ராம் நகர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையில் குழிகள் இருப்பதால், பாதி அளவுக்கு சாலையை மறைத்து போக்குவரத்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் இந்த வழியே ஆம்புலன்ஸ் கூட அவசரத்திற்கு சாலையை கடந்து செல்ல முடியவில்லை. குறிப்பாக, நேற்று இரவு ஒரு அவசரகால ஊர்தி போக்குவரத்து நெரிசலில் சிக்கி பின் சுமார் 15 நிமிட தாமதத்துக்கு பின் கடந்து சென்றது. வானமாமலை நகர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை கடுமையான நெரிசல் ஏற்படுவதால், இதனைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக போக்குவரத்து காவல்துறையினரை அந்த இடத்தில் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் சிரமம் இன்றி பயணிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது