மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் வலியுறுத்தினார்.
மணிப்பூர் வன்முறை குறித்து இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தியும், மத்திய டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் உள்ள அனைத்து தீவிரவாத குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்திய இளைஞர் காங்கிரசார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து மணிப்பூர் அரசு மற்றும் மாநில முதலமைச்சருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கூறி முழக்கம் எழுப்பியதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.