மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, குமரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வன்முறையால், இதுவரை 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, காங்கிஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் காங்கிரÞ தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு, மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டத்தில், நகர தலைவர் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.