தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காந்தி சிலை முன்பு மறுமலர்ச்சி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ரவி விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்களை கண்டித்தும், அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்குமாறும் இந்திய குடியரசு தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர்மன்ற துணைத் தலைவர் குணா, மாவட்ட இணை செயலாளர் சரவணன், கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.