இந்தியாவிலேயே முதல் முறையாக சிறு,குறு நடுத்தர தொழில்களுக்கு தனி கொள்கை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் குறு, சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் நாள் விழாவை தொடக்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க திட்டத்திற்கு உயிரூட்டும் வகையில், ஆண்டிற்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 4 பெருங்குழுமங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஏற்கனவே 6 இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், கூடுதலாக 6 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியை விட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் Þடாலின், பொருளாதார வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.