மதுரை மாவட்டம், பாலமேடு பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் ஆதி ஜோதி முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புண்ணியாசனம், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, நான்கு கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
