மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது
ஆரியபட்டி கிராமம்.
இக்கிராமத்தில் உள்ள பழமையான முத்துநவனம்மாள் திருக்கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், வாஸ்து சாந்தி, பிரவேச பூஜை உள்ளிட்ட முதல்யாக சாலை பூஜைகளும், புணர் பூஜை, மூலமந்திர பூஜை உள்ளிட்ட இரண்டாம கால பூஜைகள், கோ பூஜைகளும் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து, மங்கள இசையுடன் கடம் புறப்பாடு மற்றும் அர்ச்சகர் தெய்வசிலை கோவிலை சுற்றிய பின் புனித நீரை கோவில் கலச்சத்திற்கு ஊற்றி நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில், ஆரியபட்டி பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டிகுழுவினர் செய்திருந்தனர்.