மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள டி புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோயில் முன்பு யாகசாலையில் புனித நீர் பூஜிக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, கோபுரத்தின் மேல் உள்ள கலசத்தில் ஊற்றி மகா சம்ப்ரோஜனம் செய்தனர் .
மதுரை, கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோயில்
அமைந்துள்ளதால் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் , அங்கு கலந்து கொண்ட 2000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
