சென்னையில் நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 82 நியாய விலைக்கடையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை: ஏற்கனவே பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் நியாய விலைக்கடையுடன் சேர்த்து சென்னையில் மொத்தம் 111 கடைகளில் கூட்டுறவுத்துறை சார்பில் நாளை முதல் தக்காளி விற்பனை
சென்னையில் நியாய விலைக்கடைகளில் தக்காளியின் விற்பனை அளவைப் பார்த்தறிந்தபிறகு, அனைத்து மாவட்ட நியாய விலைக்கடைக்கும் தக்காளி விற்பனை கட்டாயம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வரும் காலத்தில் வேளாண் விற்பனை மையம் மூலம் தக்காளியை கொள்முதல் செய்யவும் , நெல் , கரும்புபோல தக்காளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் பேட்டி