கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 118வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தமிழ் மொழிக்காக பாடுபட்டவர், சுதந்திர வேட்கை கொண்டவர் மா.பொ.சிவஞானம் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.